2025 மே 19, திங்கட்கிழமை

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 51 பேர் கைது

Sudharshini   / 2015 மார்ச் 25 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்ட விரோதமான முறையில் மது விற்பனையில் ஈடுபட்டடிருந்த 51 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் விசேட பிரிவு அத்தியட்சகர் என்.துசாதரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், மதுவரித்திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய, கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் உதவியுடன் ஆணையாளர் ஜே.என்.கே.பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் சோதிநாதன் மற்றும் கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் விஷேட பிரிவு அத்தியட்சகர் என்.துசாதரன் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இச்சுற்றிவளைப்பு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது, அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பெருமளவு மதுபான போத்தல்கள், பியர் போத்தல்கள், சிகெரட் வகைகள், போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டதென கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் விசேட பிரிவு அத்தியட்சகர் என்.துசாதரன் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 17 விடுதிகளின் உரிமையாளர்கள், 25 மது விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள், 09 போதைப்பொருள் விற்பனையாளர்கள் அடங்களாக 51 பேரை கைதுசெய்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி சந்தேக நபர்களை பொத்துவில், கல்முனை, அம்பறை, அக்கரைப்பற்று, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, திருகோணமலை ஆகிய நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.
 
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X