Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 26 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சமாதானப்பாதையானது மலர்கள்; தூவப்பட்ட பாதை அல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த பாதை. சமாதானப்பாதையில் செல்வது என்பது மிகமிகக் கடினமானது. அந்தக் கடினமான பாதையில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் செல்கின்றது. வரும் சலசலப்புகளை தாங்கள் பெரிதாக எடுக்கப்போவதில்லை என்று கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை (25) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மனங்களின் சந்திப்பு என்ற இலக்கை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்கின்றது. இன்று ஒரு கடினமான காலகட்டம். போராட்டங்களை நடத்தும் தலைவர்களுக்கு பெரியளவில் கஷ்டம் இல்லை. ஆனால், சமாதானத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படும். சமாதானத்தை நோக்கிச்செல்பவர்கள் மற்றையவர்களின் மனங்களை வெல்லவேண்டியவர்களாக உள்ளனர்.
சமாதானத்தை நோக்கிச்செல்பவர்களுக்கே கஷ்;டங்கள் வரும். இதனால், சமாதானத்தை நோக்கிச்செல்பவர்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் பல்வேறு வெடிப்புகள் எழுந்தன. பல பூகம்பங்கள் எழுந்தன. சுதந்திர தினத்தை பகிஷ்கரிப்பதில்லை என்று நாங்கள் கருதினாலும், அனைவரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்று அர்த்தம் இல்லை. தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள் அல்லர். இந்த நாட்டில் சமமாக வாழ விரும்புகின்றவர்கள் என்று அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் காட்டும் முகமாகவே அவர் கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாண அமைச்சுப்பதவி எங்களுக்கு மகுடம் அல்ல. ஆனால், இதை அலட்சியம் செய்து தூக்கி எறியக்கூடாது என்பதுடன், மக்களுக்காக இதை நாங்கள் ஏற்றுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .