Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 26 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
தேசிய கலைத்திட்டம், இணைபாடவிதான செயற்பாடுகள், சமூக எழுச்சிசார்ந்த செயல் நெறிகள் மற்றும் தொழில்நுட்பத்தை உள்வாங்கும் இயலுமையை விருத்தி செய்தல் ஊடாக தரமான கல்வி வழங்கும் மையங்களாக பாடசாலைகளை இயங்கச்செய்வது தனது நிர்வாகத்தின் நோக்கமென மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளர் முகம்மது இப்றாஹிம் சேகு அலி தெரிவித்துள்ளார்.
ஏறாவூரிலுள்ள வலயக்கல்வி பணிமனையில் நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
கல்வி நிர்வாக சேவை தரம் - 11 ஐச் சேர்ந்த வியாபார நிர்வாக துறையின் சிறப்புப்பட்டதாரியான முகம்மது இப்றாஹிம் சேகு அலி, கடந்த காலத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், திருகோணமலை - மூதூர் புனித அன்ரனீஸ் மகா வித்தியாலத்தில் ஆரம்பக்கல்வியையும் மட்டக்களப்பு - ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசலையில் உயர்கல்வியையும் கற்றுள்ளார்.
இவர் ஸ்ரீஜயவர்தனபுர, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களில் கற்றுத்தேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .