Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 26 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
'சிறுபான்மை மக்களுக்கு தேவை என்று போராட்டத்தினாலும் தியாகத்தினாலும் பெறப்பட்ட மாகாணசபையை பயன்படுத்தி கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக பல சட்டதிட்டங்களை வகுத்தனர். இதனால் தமிழர்களே பெரிதும் பாதிக்கப்பட்ட வரலாறுகளே அதிகம்' என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்
துறைநீலாவணை தெற்கு 1, கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு ஒருதொகை கதிரைகளை கையளிக்கும் நிகழ்வு அதன் தலைவர் ஆ.திருச்செல்வம் தலைமையில் பல்தேவைக்கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை(24) மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மஹிந்த அரசாங்கத்தினால்; வடக்கு, கிழக்கில் திட்டமிடப்பட்ட முறையில் அத்துமீறி பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள், இன்றைய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் விடுவிக்கப்படுவது தமிழ்மக்கள் புதிய அரசுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாகவே அமையும்.
என்றுமில்லாதவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் காலடிக்கு வந்து மைத்திரிபாலவுக்கு வாக்களிக்குமாறு கூறியது. ஏன் என்றால் கடந்தகால ஆட்சியில் இருந்த மஹிந்த அரசாங்கம் தமிழ்; மக்களை கொன்றுகுவித்ததுடன் தமிழர்களின் காணிகளை சுவீகரித்து சிங்கள குடியேற்றங்களை செய்துவந்தனர்.
அவ்வாறான ஆட்சியாளரை வெளியேற்றவேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல பிரயத்தனங்களை மேற்கொண்டது. இன்று தமிழர்களின் காணிகள் சிறுசிறு பகுதிகள் விடுவிக்கப்படுகிறன.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு பலபகுதிகளை விடுவிப்பதாக கூறியுள்ளார். எனவே ஒட்டுமொத்தமாக எமது பிரச்சினைகளை பெறமுடியாவிட்டாலும் ஒருசில விடயங்களைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .