Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 26 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த மாதம் 25ஆம் திகதிவரை 113 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதுடன், இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டல் மற்றும் வீடுகளில் டெங்கு சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை வியாழக்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
டெங்கு நோய் தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வு இருக்கவேண்டும். இந்த நிலையில், வீடு மற்றும் வீட்டுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வீடு மற்றும் வீட்டுச்சூழலை வைத்திருக்கக்கூடாது எனவும் அவர் கூறினார்.
காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், தாதியர், கிராம உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையிலும் ஆறு குழுக்கள் பிரிக்கப்பட்டு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மற்றும் கிராம உத்தியோகஸ்;தர்கள், தாதியர்கள் அடங்கலாக இந்தக் குழுக்கள் டெங்கு பரிசோதனையில் ஈடுபடுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .