Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 26 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கு நினைக்கக்கூடாது என்று காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.
'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்தல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பெண்கள் மீது வன்முறைகளை மேற்கொள்வோர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். அத்துடன், வன்முறைகள் தொடர்பில் பெண்கள் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும்.
பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கு சிலர் நினைக்கின்றனர். பெண்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது. சகல மட்டங்களிலும் பெண்களின் ஆலோசனைகளும் பெறப்படவேண்டும். வீட்டுக்குள் பெண்கள் முடங்கிக் கிடக்காமல், தமது மதம் சார்ந்த, கலாசார விழுமியங்களுடன் வெளியில் வந்து திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .