2025 மே 19, திங்கட்கிழமை

'விபத்துகள் அற்ற நாடொன்று'

Gavitha   / 2015 மார்ச் 26 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

'விபத்துகள் அற்ற நாடொன்று' என்ற கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (26), பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தர்மிக்க நவரட்ன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள துவிச்சக்கர வண்டி, முச்சக்கரவண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அனைவரும்  பொலிஸ் நிலையத்துக்கு  சமூகமளித்து, பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீதி விபத்துக்களினால் வருடமொன்றுக்கு இலங்கையில் 2,500க்கு அதிகமான நபர்கள் மரணித்து வருகின்றனர்.

10 வருடங்களில் 36,031 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 2,912 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளனர். 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 222 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணித்துள்ளனர் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X