2025 மே 19, திங்கட்கிழமை

அரச ஊழியர்களுக்கான விழா முற்பணம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்.வா.கிருஸ்ணா

அரச  ஊழியர்களுக்கான  விழா   முற்பணம் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் நேற்று  வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.தடலஹேவினால் மத்திய, அமைச்சுக்களின்  செயலாளர்கள், மாகாண  பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத்  தலைவர்களுக்கு இந்த சுற்றுநிரூபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரசாங்க ஊழியர்களுக்கு 5,000 ரூபாய்;  விழா முற்பணமாக வழங்கப்பட்டு 10 மாத தவணை அடிப்படையில் மீள அறவீடு செய்யப்பட்டுவருகின்றது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,  8 மாத தவணை அடிப்படையில் இந்த தொகை மீள அறவீடு செய்யப்படும் என  கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய, அதிகரித்த விழா முற்பணக் கொடுப்பனவு சுற்றறிக்கையினால் அரச ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X