Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
வெளிநாட்டு நகைகளின் வருகை மற்றும் இயந்திரங்களினால் நகை செய்வதனால், உள்ளூர் நகை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள நகை செய்யும் பட்டறையொன்றில் தொழில் புரிவோவோர் கருத்து தெரிவிக்கையில்,
நகை உற்பத்தியாளர்கள் கடந்த காலங்களில் தங்களது கைவினைத் திறன் மூலமும் தங்களது சிந்தனையில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய நகைகளை செய்து விற்பனை செய்து வந்தனர்.
பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட திருமாங்கல்யத்துக்குரிய தாலிக்கொடிகள், மாலைகள், பதக்கங்கள், வளையல்கள், மோதிரங்கள், தோடுகள் மற்றும் கைச்சங்கிலிகள் எல்லாம் தற்போது இயந்திரங்களினால் செய்யப்படுவதால் தாம் தொழிலின்றி சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக் கடைகளில் தற்பொழுது உள்ளூர் உற்பத்தி நகைகளுக்குப் பதிலாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் நகைகளே கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன எனவும் கூறினர்.
இதுபற்றி செட்டியார் தெருவில் உள்ள இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஆண்டி விஜயகுமாரிடம் கேட்டபோது,
வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் மற்றும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் நகைகளில் பெரும்பாலானவை புதிய வடிவங்களில் கூடுதல் கவர்ச்சியுடையனவாகவும் தங்கத்தை தங்கத்தால் ஒட்டும் தொழில் நுட்பத்தால் கழிவு இல்லாமலும் இருக்கின்றன.
இதனால், வாடிக்கையாளர்கள் பணத்தின் பெறுமதியை பார்க்காமல் ஒரு பவுண் 22 கரட் தங்கத்துக்கு 44,000 ரூபாய் செலுத்தி தரத்தில் சிறந்த தங்க வைர நகைகளை வாங்குவதில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக உள்ளூர் நகை உற்பத்தியாளர்களுக்கு தொழில் குறைந்துள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்.
அவர்களும் புதிய முறைக்கு மாற்றம் பெற்று இயந்திரங்கள் மூலம் நகைகளை செய்வதற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் தொழில் இல்லாப் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
26 minute ago
36 minute ago