Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்திய தலைவர் உட்பட மூன்று பேர் செவ்வாய்க்கிழமை (31) கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மற்றையவரான மகேந்திரன் புவிதரன் என்ற மேற்படி முன்னாள் போராளி, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்திய தலைவரென அழைக்கப்படும் புவி என்பவர் உட்பட மூவர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து கார், போலி அடையாள அட்டைகள், கத்தி;, பொல்லுகள்;, மூன்று சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
கல்லடி பிள்ளையர் கோயில் வீதியில் குறித்த கார் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago