2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீராபத்து தணிப்பு பயிற்சி நெறி

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

நீராபத்து தணிப்பு இரண்டாம் கட்ட பயிற்சி நெறியொன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் நடைபெறுகின்றது. வியாழக்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சிநெறி திங்கட்கிழமை (05) நிறைவு பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 24 தொண்டர்கள் இப்பயிற்சியை  பெற்று வருகின்றனர்.

இதில் பயிற்சி பெற்று வெளியேறும் தொண்டர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டமுள்ள நீர் தேக்கங்கள் போன்றவற்றில், கடமையிலீடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுரார் கூறினார்.

இதில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர்கள் இப்பயிற்சியினை தொண்டர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதில் பயற்சி பெற்று வெளியேறும் தொண்டர்களுக்கு தேசிய உயிர் காப்பு நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பெறுமதி வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி பெற்று வெளியேறும் இத்தொண்டர்களுக்கு உள்நாட்டிலும்  வெளிநாடுகளிலும் அதிகளவு தொழில் வாய்ப்பு கிடைக்கும் எனவும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X