Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில், 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சமூர்த்தி உணவு முத்திரை பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி முகாமையாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.
ஏறாவூரில் சமூர்த்திப் பயனாளிகள் 35 பேருக்கு சுயதொழில் முயற்சிக்காக தலா ஒரு இலட்சம் ரூபாய் சுயதொழில் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை(17) நடைபெற்றது.
ஏறாவூர் கிழக்கு சமூர்த்தி வங்கிச் சங்கத்தில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'வறுமையைப் போக்கி சுபீட்சத்தை உருவாக்குவதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சமூர்த்தித் திட்டத்தின் நோக்கமாகும்.
மக்கள் மத்தியிலே சேமிப்பு அதிகரிக்க வேண்டும். சமூர்த்திச் சேமிப்பு நிதி மூலம் மக்களுக்குத் தேவையான சுயதொழில் உற்பத்திக்காக குறைந்த வட்டி வீதத்தில், மக்கள் பணத்திலிருந்து கடன்களை வழங்குவதும் இதன் நோக்கமாகும். ஆனால், துரதிஷ்டவசமாக சமூர்த்திப் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.
இலவசமாகக் கிடைக்கக் கூடிய உணவு முத்திரைகள் மாத்திரம்தான் சமூர்த்தித் திட்டத்தின் மூலம் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்று சமூர்த்திப் பயனாளிகள் தவறாக புரிந்து வைத்துள்ளார்கள்.
இலங்கையிலே அதிகூடிய சமூர்த்தி உணவு முத்திரை பெறுகின்ற நாலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.
இம்மாவட்டத்தில், சுமார் 79 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் சமூர்த்தி உணவு முத்திரை பெறுகின்றார்கள்.
ஒரு வாரததுக்கு இதற்கான செலவு சுமார் 230 மில்லியன் ரூபாவைத் தாண்டுகின்றது.
பாரியதொரு தொகை இந்த சமூர்த்தி உணவு முத்திரைக்காக மட்டும் செலவிடப்படுகின்றது.
அதேநேரம் உணவு முத்திரை பெறுவதற்கு இந்த மாவட்ட மக்கள் காட்டுகின்ற ஆர்வம் சுயமாக முன்னேறுவதில் அக்கறை எடுக்கவில்லை என்கின்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.
உதவி நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுவதை அவர்கள் விரும்புகின்ற அதேவேளை அதைப்பற்றி வறிய மக்கள் சிந்திப்பதே இல்லை என்கின்ற நிலைமையும் அவதானிக்கப்படுகின்றது.
ஏறாவூரிலுள்ள இரண்டு சமூர்த்தி வங்கிகளிலே 20 கோடிக்கு மேற்பட்ட தொகை சேமிப்பாக உள்ளது. இதில் சுமார் ஐந்தாறு கோடிக்கு மேற்பட்ட தொகை மக்கள் மத்தியிலே கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மீதிப் பணத்தொகை அரச வங்கியிலே சேமிப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தையும் இவ்வூர் மக்கள் கடனாகப் பெற்று தங்களது சுய தொழில்களைச் செய்து பொருளாதாரத்தைப் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
சேமிப்பில் இருக்கும் சமூர்த்தி நிதியை மக்களுக்குக் கொடுத்து சுழற்சி நிதியில் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற புதிய அரசாங்கத்தின் சிந்தனையின் அடிப்படையில்தான் இவ்வாறு கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அதிர்ஷ்ட வசமாக ஹம்பாந்தோட்டை, பொலொன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலேதான் இந்த சமூர்த்தி நிதி கடனாக வழங்கப்படுகின்றது.
ஆகக்கூடிய கடன் தொகையாக வருடாந்த நான்கு வீத வட்டியில் ஒரு இலட்ச ரூபாய் உங்களுக்குக் கடனாகக் கிடைக்கும் என்றார்.
வீடமைப்பு மற்றும் சமூர்த்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியினாலும் மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி முகாமையாளரினாலும் சமூர்த்தித் திட்டப்பயனாளிகளுக்கு கடன் பணம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago