2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் கௌரவிப்பு நிகழ்வு

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் கௌரவிப்பு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் வெள்ளிக்கிழமை (17) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்விப் பொதுத்தர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற 20 மாணவர்களும்  கடந்த வருடம் நடைபெற்ற  5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த 26 மாணவர்கள் உட்பட   மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான 35 மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.வேல்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஸ்.எஸ்.எம்.சாள்ஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், கல்வி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், கிராம பெரியோர்கள், கிராம பொது  அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X