2025 ஜூலை 16, புதன்கிழமை

அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக ஹாபீஸ் நியமனம்

Gavitha   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களினதும் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் இந்த மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு இணைத்தலைமை வகிப்பதுடன் இங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முழுமையான கரிசனையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் காட்டுவார் என ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .