2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீன்பிடி இலாகா வீதியிலுள்ள  வீடொன்றிலிருந்து வெள்ளிக்கிழமை(17) இரவு, கேரளக் கஞ்சாவுடன் இளைஞனொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிடமிருந்து; 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 180 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தமக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கஞ்சாவுடன் அந்த இளைஞனை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X