Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி தட்சணாமூர்த்தி சுந்தரேசன் தலைமையில் பாடசாலை வளாகத்திலுள்ள சுவாமி நடராஜாநந்தா மண்டபத்தில் பாடசாலை அதிபரின்; முன்நிலையுடன் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் வளர்ச்சிப்படியில் அங்கு படித்து வெளியேறிய பழைய மாணவர்களின் பங்கு பிரதான இடத்தைப் பெறுகிறது. எனவே சிவாநந்தியர்களாக இருக்கும் அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்து ஆக்கபூர்வமான கருத்துக்களைக் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சங்கத்தின் ஆயுள்கால உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொதுக்கூட்டத்தினத்தன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பொதுச்செயலாளரிடம் விண்ணப்பப் படிவங்களைப்பெற்று அங்கத்தவராவதற்கான நடமுறையைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு பொதுச் செயலாளர். த.தினேஸ்குமார் - 071 440 2227 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
3 hours ago