Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
சித்திரை மாத வளர்பிறை திதியில் அனுஷ்டிக்கப்படும் அக்ஷய திருதியை தினமான செவ்வாய்க்கிழமை (21) மட்டக்களப்பு நகரில் உள்ள மக்கள், தங்க நகைக்கடைகளில் தங்க வைர நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர்.
ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொள்ளும் அக்ஷய திருதியை தினத்தில் நாம் செய்யும் செயல்கள் யாவும் பல்கிப் பெருகும் என்பதற்கொப்ப பெறுமதிமிக்க அணிகலன்களான காதணிகள், வளையல்கள், மேதரங்கள், மாலைகள், செயின்;கள், தங்கக் காசுகள் மற்றும் தாலிக்கொடிகள் என்பவற்றை வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்தனர்.
மட்டக்களப்பு, கல்முனையில் அமைந்துள்ள சொர்ணம் நகைக் கடைகளில் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முத்துக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கோடு, முத்துக்கள் உள்ள சிப்பிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாக அதன் தலைவர் முத்துப்பிள்ளை விஸ்வநாதன் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களே அவர்களின் விருப்பத்துக்கிணங்க சிப்பிகளைத் தெரிவு செய்து அதை உடைக்கும் போது அவர்களின் அதிஷ்டத்தைப் பொறுத்து அதனுள் உள்ள முத்துக்கள் வழங்கப்பட்டமை விசேட நிகழ்வாகும்.
நகைகளைக் கொள்வனவு செய்வோருக்கு வீட்டுப் பாவனைப் பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Jul 2025
14 Jul 2025