Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டமானது ஏனைய மாவட்டங்களை விடவும் மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளையும் மிகவும் வினைத்திறனுடன் பயன்படுத்தி செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்த மாவட்டமாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற மாவட்ட திட்டமிடல் பிரிவுகளில் திறமையாகச் செயற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கான பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாறானதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டுக்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பு முக்கியமானதாகும்.
அந்த அடிப்படையில் இவ்வாறானவர்களைப் பாராட்டிக் கௌரவிப்பதானது மகிழ்ச்சியைத் தருகிறது. இவ்வாறான முன்னேற்றகரமான செயற்பாடு தொடர்ந்து மாவட்டத்தில் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்டத்தின் மாவட்ட செயலக திட்டமிடல் செயலகம், பிரதேச செயலகங்களிலுள்ள திட்டமிடல் பிரிவுகள் அடங்கலாக மொத்தமாக 527 பேர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 50 பேர் நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு சிறப்பாகச் செயற்பட்டு செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அரசாங்க அதிபரால் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதில் அபிவிருத்தி உதவியார்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள். முகாமைத்துவ உதவியாளர்கள் என பல தரப்பினரும் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago