Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட களுவாங்சிக்குடி பிரதான வீதியில் வந்த மோட்டார்சைக்கிளுடன் சிறியரக கெப்வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டுரைச்சேர்ந்த இ.புவிநாயகம் மற்றும் அவரது மனைவி வரலெட்சுமி இருவரும் மட்டக்களப்புக்குச் சென்று நேற்று வியாழக்கிழமை திரும்பிவரும்போது களுவாஞ்சிக்குடி பிரதான வீதிச் சந்தியை கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த சிறியரக வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
அதேவேளை, விபத்து இடம்பெற்றதும் சிறியரக கெப்வாகனம் செலுத்திவந்தவர் வாகனத்தை அவ்விட்டத்திலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றபோதும் பொதுமக்களின் உதவியுடன் அவர் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
18 minute ago