2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மலேரியா அற்ற இலங்கையை உருவாக்கும் திட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சர்வதேச மலேரியா ஒழிப்பு தினத்துக்காக மலேரியா அற்ற இலங்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக கே.கே.வை.எக்ஸ்பிறஸ் ஊடக வலையமைப்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மலேரியா தடுப்பு பிரிவுடன் இணைந்து இலவச மலேரியா இரத்தப் பரிசோதனை மற்றும் வெளிநாடு செல்வோருக்கான மலேரியா தடுப்பு மருந்து வழங்கல் முகாம் ஒன்றை வெள்ளிக்கிழமை (24) நடாத்தியது.

காத்தான்குடி கடற்கரை வீதி, மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற  இம்முகாமில், மட்டக்களப்பு பிராந்திய மலேரிய தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி மேகலா ரவிச்சந்திரன் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் ஆகியோரின் வழிகாட்டலில், மலேரியா தடுப்பு பிரிவின் வெளிக்கள உத்தியோகஸ்தர்களான ஆர்.கஜேந்திரன், கே.ராஜ், எம்.ஜனன் ஆகியோரின் பங்கேற்புடன் இப்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த இலவச பரிசோதனை முகாமில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டதுடன், குறுகிய நாட்களுக்குள் இந்தியா போன்ற மலேரியா தொற்றுள்ள நாடுகளுக்கு செல்லவுள்ளோருக்கு இலவசமாக மலேரியா தடுப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X