2025 ஜூலை 09, புதன்கிழமை

சிகிரியா பளிங்குச் சுவர் பிரதேசத்தை பாதுகாக்க திட்டம்: செனரத் திஸாநாயக்க

Thipaan   / 2015 மே 05 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிகிரியா குன்றின் பளிங்குச் சுவர் பிரதேசத்தைப் பாதுகாப்பது தொடர்பான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சிகிரியாவை பார்வையிடுவதற்கென வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர், பல்வேறு சந்தர்ப்பங்களில் சிகிரியா பளிங்குச் சுவரில் ஏற்படுத்தியிருந்த சேதங்களைக் கருத்திற்கொண்டே தாம் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் இத்திட்டத்தின் பிரகாரம் ஒலிபெருக்கி மூலம் சுற்றலாப் பயணிகளை அறிவுறுத்துவதுடன் சிகிரிய பளிங்குச் சுவரைச் சுற்றுலாப் பயணிகள் நெருங்குவதைத் தடுக்கும் விதத்தில் கதிர்வீச்சு முறையொன்றை செயற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் பளிங்குச் சுவரை எவரும் தொடுவதற்கு இயலாதவாறு, தொல்லியல் நோக்கில் பாதிப்பு ஏற்படாத விதத்தில் மிகவும் நுண்ணிய வலையொன்றினால் மறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிகிரியா பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதால் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச யுவதியொருவருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்மையைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .