2025 மே 17, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி மின்சார வேலியில் பாய்ந்து விபத்து

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கழிவுகள் சேகரிக்கும் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.
அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் தீவுக்காலை பிரதேசத்திலேயே இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி கம்பி வேலியுனுள் பாய்ந்து சேதத்துக்குள்ளானதுடன், சாரதி காயங்களுடன் பனங்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து சாகாமம் வீதியினூடாக பயணித்த முச்சக்கரவண்டி அவ்வழியாக பயணித்த பிரதேசசபை கழிவுகள் சேகரிக்கும் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது வீதியில் இருந்த பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி, நேராக மின்சார தூணில் மோதாது அருகில் இருந்த வேலியினுள் பாய்ந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றையவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .