2025 மே 17, சனிக்கிழமை

உலக செயற்பாட்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வூட்டும் பேரணி

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உலக  செயற்பாட்டு வாரத்தையொட்டி மட்டக்களப்பு, கிரான் பிரதேச பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் வெள்ளிக்கிழமை (08) பேரணியொன்று நடாத்தப்பட்டது. 

உலக செயற்பாட்டு வாரம் மே மாதம் 4ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேல்ட்விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிரான் பிரதேச திட்ட பணிப்பாளர் இந்து றோகாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

கடந்தகால போர்ச்சூழலினால் கிழக்கு மாகாணத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போஷாக்கின்மை ஆகியவற்றை முற்றாக ஒழிப்பதே இந்த செயற்பாட்டின் இலக்கு என திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார். 

கிரான் சுற்றுவட்டச் சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, பிரதான வீதி வழியாக ரெஜி காலாசார மண்டபத்தை அடைந்தது. அங்கு விஷேட செயலமர்வு ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வி;ல், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்லரன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆர். ரவிச்சந்திரன் பிரதேச செயலர் கே.தனபாலசுந்தரம் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் இப்பேரணியில் பங்கேற்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .