2025 மே 17, சனிக்கிழமை

வீடுகளை நிர்மானிக்க சுவீடன் மக்கள் உதவுவது மகிழ்ச்சிக்குரியது: சுபாஷி

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் சுவீடன் மக்கள்; முன்நின்று உதவுவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஷி திஸாநாயக்க தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி கிராம வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் ஐந்தாவது வீடமைப்புத் திட்டமாக இந்தக் கிராமம் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

சுவீடன் மக்கள் வழங்கும் லொத்தர் சீட்டிழுப்பு  நிதியுதவியைக் கொண்டே இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பலருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. ஆயினும் எம்மிடம் தற்போதைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிதி வசதி உள்ளதால் எல்லா கிராமங்களையும் தெரிவு செய்யமுடியாத நிலையில் உள்ளோம்.

இந்த வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக அரச அதிகாரிகளின் ஆதரவும் எமக்குக் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஒரு வீட்டையாவது அடைந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் கனவு இன்று நனவாகியிருக்கின்றது.

இந்த வீடுகளை செம்மையாகக் கட்டி முடிப்பதற்கு பயனாளிகளான உங்களது ஆதரவும் எமக்கு முழுமையாகத் தேவைப்படுகின்றது.

இக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த இயங்கினால் இந்த வீட்டுத் திட்டம் வெற்றியளிக்கும். ஒவ்வொரு வீடுகளும் தலா ஏழு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .