Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மே 10 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்புக்கு ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் பொதுமக்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார்.
வந்தாறுமூலை மக்களின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சித்தாண்டி மக்களின் அழைப்பையும் ஏற்று அங்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, சித்தாண்டி பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, சித்தாண்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமது அழைப்பை ஏற்று தமது பிரதேசத்துக்கு வருகை தந்தமைக்கு மக்களால் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
23 minute ago
39 minute ago