2025 மே 17, சனிக்கிழமை

வைத்திய முகாம்

George   / 2015 மே 13 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அலுவலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு, தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் செவ்வாய்க்கிழமை(12) மேற்கொள்ளப்பட்டன.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி தஸ்லீமா பஸீர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர், குடும்ப சுகாதார மாதுக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களின் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 150ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .