Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 14 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா
'இந்த நல்லாட்சியில் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை என்றால், இனி ஒருபோதும் அது எமக்கு கிடைக்காது. இந்த நிலையில், எமது சிறுபான்மை அரசியல் தலைமைகள் இணைந்து இதற்காக ஏகோபித்துக் குரல் கொடுக்கவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் வரலாற்றில் மாகாணசபை அமைச்சுக்களையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய ஒரு நாள் இடம்பெயர் சேவை, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பிரச்சினைகளும் தேவைகளும் மக்களிடம் அதிகமாக இருந்தபோதிலும், அரசியல் அதிகாரம் கொண்ட தலைமைகள் எந்தளவுக்கு மக்களின் தேவைகளை ஈடுசெய்கின்றன என்ற கேள்வி எங்கள் எல்லோருக்கும் உண்டு.
மக்களுடைய பிரச்சினைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களுடைய சொந்தப் பிரச்சினைகளாக உணர்ந்து செயற்படும்போது, பொதுமக்களுக்கான சேவைகள் 100 சதவீதம் திருப்தி அளித்ததாகக் கொள்ளப்படும்.
மாகாணசபை நிர்வாகத்தில் இரண்டு பிரச்சினைகள். ஒன்று எங்களின் ஒட்டுமொத்த வரவு -செலவுத்திட்டத்தில் சுமார் 87 சதவீதமான நிதி நிர்வாகச் செலவுக்கு போகின்றது. மீதி 13 சதவீத நிதியை கொண்டே மாகாண அபிவிருத்தியை செய்து பொதுமக்களுக்கான சேவைகளை ஆற்றவேண்டியுள்ளது.
இது ஒரு பாரிய சவால். வெறுமனே சம்பளம் எடுத்துக்கொண்டு காலம் கடத்துகின்ற தனி நபர்களாக மாகாணசபை அதிகாரிகளும் மாகாணசபையை ஆளுகின்ற அரசியல்வாதிகளும் இருந்துவிட முடியாது.
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தம் எப்பொழுது முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றதோ, அப்போதே இந்த மாகாணசபை முழுமையான அதிகாரமுள்ள மாகாணசபையாக மாற்றம் அடையும்.
ஒட்டுமொத்தமாக பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் உட்பட 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு தோதான ஒவ்வொரு நகர்வுகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த அதிகாரங்களை நாங்கள் அடையப்பெற்றால், இந்த மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை நாங்களே தீர்க்கமுடியும்.
இந்த நல்லாட்சிக்காலத்தில் சகல அதிகாரங்களும் பெற்ற மாகாணசபையாக கிழக்கு மாகாணசபை மிளிரவேண்டும் என்று நாம் ஆசிக்கின்றோம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மத்திய அரசில் எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சேர்ந்து அரசமைத்து நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற அதிர்ஷ்டம் இப்போதே கிடைத்திருக்கின்றது. எனவே, இந்த அருமையான காலகலட்டம் மாகாணசபைகளுக்கும் அதிகாரத்தை தருவதாக கைகூடி வரவேண்டும்.
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு, நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு. ஏனெனில், அவர்களின் நல்லாட்சிக்கு ஒட்டுமொத்தமாக ஓரணியில் நின்று வழிகோலிய இந்த வடக்கு, கிழக்கு மலையக சிறுபான்மைச் சமூகத்துக்கான கைங்கரியமாக அவர்கள் இதனைச் செய்தாக வேண்டும்' என்றார்.
இந்ந இடம்பெயர் சேவையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியவதி கலபதி, கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, விவசாய கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சர் கே.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திரதாஸ கலபதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினிதேவி சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago