Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 16 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை விவசாய விரிவாக்கற் பிரிவில் விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் செய்முறைப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் போதனாசிரியை எம்.ரீ. பஸ்லூனா தெரிவித்தார்.
மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய உற்பத்தியை மீண்டும் ஊக்குவிக்கக் கூடிய வகையில் அமைந்த இந்த செயன்முறைப் பயிற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் விவசாயிகள் கிருமிநாசினிப் பாவனையை குறைத்துக் கொள்ளவும் காலப்போக்கில் அவற்றைக்கைவிட்டு இயற்கை விவசாயத்துக்கு திரும்பவும் வழியேற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பான பயிற்சிகள் வியாழக்கிழமை (14) வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையப் பிரிவிலுள்ள சேம்பையடி கண்டத்தில் விவசாயப் போதனாசிரியை எம்.ரீ. பஸ்லூனா தலைமையில் இடம்பெற்றது.
இந்த கள செயன்முறைப் பயிற்சி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு வலயத்;துக்குப் பொறுப்பான விவசாய உதவிப் பணிப்பாளர் வீ. லிங்கேஸ்வரராஜா, விவசாய பிரதிப் பணிப்பாளர் அலுவலக விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம். ஜமால்தீன், பாடவிதான உத்தியோகஸ்தர் எஸ். சித்திரவேல், விவசாயப் போதனாசிரியர்களான ஆர். பிரபாகரன், வை.எல். சித்தி ஹஸ்மியா ஆகியோர் உட்பட பிரதேச விவசாயிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago