2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நினைவுகூர்ந்து பேரணி

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எஸ்.எம்.எம்.றம்ஸான்,எஸ். பாக்கியநாதன்
 
ஜோசப்வாசஸ் அடிகளார் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட நாளை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு புனித காணிக்கை மாதா ஆலயத்தில் இருந்து மாபெரும் பேரணி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.
 
இப்பேரணியானது மட்டக்களப்பு திருமலை வீதியூடாக சென்று வெள்ளப்பாலத்தின் வழியாக தாண்டவன்வெளி புனித ஜோசப் வித்தியாலயத்தினை வந்தடைந்தது.
 
அதனைத் தொடர்ந்து பாடசாலையில் விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது. மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கையின் பல பாகங்களிலும் கல்விப்பணி மற்றும் கத்தோலிக்க மத வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியதுடன் மட்டகளப்பில் ஜோசப்வாஸ் பாடசாலையினை உருவாக்கி கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றியுள்ளார்.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .