2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி: ஒருவர் காயம்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர்பகுதியில் நேற்று(15) இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த வான் மோதியதில் மட்டக்களப்பு, உப்போடையை சேர்ந்த 63வயதுடைய கு.திருவேல்முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானும் மட்டக்களப்பு பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இன்று பிற்பகல்; 1.00மணியளவில் மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியின் தாண்டவன்வெளி சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்துக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் புகையிரத நிலைய வீதிக்கு குறுக்கறுத்த மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .