Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 20 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை எதிர்கால சந்ததியினருக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு மாணவர் நாடாளுமன்ற நிகழ்வுகள், மட்டக்களப்பு சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.
அதிபர் எம். தவராஜா தலைமையில் நடைபெற்ற மாணவர் நாடாளுமன்ற நிகழ்வுகளில் ஆசிரியர்கள் மற்றும் உயர்வகுப்பு மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
மாணவர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாடசாலை அதிபர் தவராஜா, 'மாணவர்களிடத்தில் ஜனநாயக விழுமியங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை தெரியப்படுத்துவதும் இதன் பிரதான நோக்கமாகும்.'
'ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் தேர்தலாகும். இதனூடாக, பாடசாலை மட்டத்தில் ஜனநாயகப் பண்புகளை வளர்ப்பதற்கும் இது வழிவகுக்கிறது' என்றார்.
இந்நிகழ்வுகளின் போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்களிப்பதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்ட அதேவேளை, ஆசிரியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டதோடு ஜனநாயகத் தேர்தல் பற்றிய விழிப்பூட்டலிலும் ஈடுபட்டார்கள்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago