Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 20 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நீதிமன்றத் தீர்ப்பளிக்கப்பட்ட தவறாளர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் சமுதாயஞ்சார் சீர் திருத்தப் பணிகள், ஏறாவூரில் புதன்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகஸ்தர் சுப்பிரமணியம் தயானந்தன் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சமுதாயஞ்சார் சீர் திருத்தத் திணைக்களம் சிறைக் கைதிகளின் நன்னடத்தைப் பண்புகளை விருத்தி செய்து அவர்களை சமூக வாழ்வில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக இத்தகைய வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
ஏறாவூர் நகர சபை பிரிவிலுள்ள நீரோடைகள், வடிகான்களில் நிரம்பியிருந்த சாக்கடைகளைத் துப்புரவாக்கும் பணி பதன்கிழமை இடம்பெற்றது.
ஏறாவூர் நகரசபைப் பிரிவில் டெங்கு நோயை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த சிரமதானப் பணி மேற்கொள்ளப்படுவதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கட்டங்கட்டமாக டெங்கு ஒழிப்பை மேற்கொள்ளும் கூட்டிணைந்த துப்புரவாக்கும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தங்களது வீடுகளையும் சுற்றாடலையும் துப்புரவாக வைத்திருக்கும் சமூகப் பொறுப்பை ஒவ்வொரு பிரஜையும் கைக்கொண்டால் வீடும் வீட்டுச் சூழலும் கிராமமும் நகரமும் நாடும் தூய்மையானதாக இருக்கும் என்று சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி தெரிவித்தார்.
இது விடயமாக பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். அதேவேளை தமது வீட்டையும் வீட்டுச் சுற்றாடலையும் ஒவ்வோர் கிராமத்தையும் தூய்மை குன்றாது பேணிப் பாதுகாப்பது அந்தப் பகுதியில் வாழ்வோரின் பொறுப்பு. மேலும், தங்களது சுற்றுச் சூழலைத் துப்புரவாக்குவதற்கு வெளியிலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை பொதுமக்கள் ஒரு போதும் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழின் வழிகாட்டுதலின் பேரில் சிறு குற்றங்களுக்காக தவறாளர்களாகக் காணப்பட்ட 15 ஆண் சிறைக் கைதிகள் முதற்கட்டமாக இந்த சமுதாயஞ்சார் சீர்திருத்த சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, சமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகஸ்தர் எஸ். தயானந்தன், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பி. கலைவாணன் மற்றும் கிராம சேவகர் ஏ.எல்.ஏ. சித்தீக் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட பல அதிகாரிகள் இந்த சிரமதானப் பணி தொடக்க நிகழ்வில் சமுகமளித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago