Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 24 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளுக்கான பொதுக் கூட்டம் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 செஞ்சிலுவைப் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 70க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 2013 ஆம், 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினூடாக மாட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானச் செயற்பாடுகள்.
முதலுதவிச் செயற்பாடுகள், நிவாரண உதவிகள் தொடர்பாக இதன்போது தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் சங்கத்தினூடாக மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
31 minute ago
2 hours ago