2025 மே 17, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள புதிய பஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, களுவாஞ்சிகுடி கிராம தலைவர் அ.கந்தவேல் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் நிதியொதுக்கீட்டின் கீழ் இப்புதிய  பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் சிறியதொரு கொட்டகையில் பஸ் நிலையம் இயங்கி வந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செவ்லராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்(ஜனா), ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மா.நடராசா, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண முகாமையாளர் ஏ.எல்.சித்திக், உட்பட கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .