2025 மே 17, சனிக்கிழமை

ஆரையம்பதியில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஆரையம்பதி அமரசிங்கம் வீதியை அண்டிய பகுதியில் அமைந்துள்ள  வீடொன்றிலிருந்து சக்திவாய்ந்த கைக்குண்டு ஒன்று  இன்று திங்கட்கிழமை காலை  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸாhர் தெரிவித்தனர்.

வீட்டு வேலி அண்டிய பகுதியில் குறித்த வீட்டு  உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, நிலத்தில் புதையுண்ட நிலையில் இந்த கைக்குண்டை கண்டுள்ளார்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, குறித்த இடத்திலிருந்து கைக்குண்டு  மீட்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .