Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 25 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.காரத்திகேசு
ஒரு நாட்டின் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சமூகத்தினை நெறிப்படுத்தக் கூடிய கருத்துக்கள், செய்திகளை ஊடகங்கள் மூலம் வெளியிடும் போது, அந்த செய்தி சமூகம் சார்ந்த மேம்பாட்டு விடயங்களை தெளிவுபடுத்தும் நோக்குடன் வெளியிடப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான சட்டமும் பாதுகாப்பும் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு, ரைட்ஸ் நவு எனும் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி வொஸ் ஒப் மீடியா அமைப்பின் விரிவுரை மண்டபத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்க தலைவர் எஸ்.அதிரன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி செயலமர்வின் போதே அவர் மேற்படி கருத்தினை முன்வைத்துள்ளார்.
'சமூத்தில் பொறுப்புக்கள் என்பது நாமே எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு விடயமாகும்.அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுவர்களாக மாற வேண்டும்'.
'ஊடகவியலாளர்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமானவர்கள், இவர்கள் ஒவ்வொருவரும் சரியாக பொறுப்புக்களை நிறைவேற்றுகின்ற நிலையில் சமூகம் விழிப்படைந்து கொள்ளும் ஊடகவியலாளர்கள் தனக்கு முன் இருக்கின்ற சவால்களை எதிர்கொண்டு துனிச்சலுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்' என தெரிவித்தார்.
'இதற்கு முதலில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பின் சக்தி வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒரு செயலில் விருப்பம் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நீங்கள் செயலில் ஈடுபட வேண்டும் தோல்விகள் ஏற்பட ஏற்பட மீண்டும், மீண்டும் முயற்சி செய்து வெற்றியை நோக்கி செல்ல வேண்டும.; அதனுடன் சமூகத்தினையும் வழி நடத்திச் செல்லவேண்டும்' என கூறினார்.
' ஊடகவியலாளர்கள் நாட்டின் சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது நீங்கள் மட்டுமன்றி நீங்கள் சார்ந்த சமூகமும் விழிப்படைந்து பாதுகாப்புடன் வாழ முடியும்'.
'எனவே ஊடகத்துறையை வெறுமனே பார்க்காது. ஒரு சமூதாயத்தின் அழிவுக்காக அல்லாது சமூகத்தின் எழுச்சிக்கான மார்க்கமாகக் கருதி ஊடகவியலாளர்கள் சமூக பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளிக் கொணர வேண்டும்' என சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
57 minute ago
3 hours ago