2025 மே 17, சனிக்கிழமை

பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகம், கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 மே 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சசிகுமார்

மட்டக்களப்பு ஊறணிப்பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது தப்பிச் சென்று, கல்லடிப் பாலத்தில் குதித்த காத்தாங்குடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.றியால் சனிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு 22ஆம் திகதி இரவு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றும் 45 வயதான குறித்த நபர்  சென்றுள்ளார்.

அதன்போது, பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மகளான 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த சிறுமி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் 23ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், குறித்த பொலிஸ் கானஸ்டபிளை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு, காத்தான்குடிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையிலிருந்து தப்பியோடி கல்லடிப் பாலத்தில் குதித்துள்ளார்.நீரில் மூழ்கிய கான்ஸ்டபிளை மீட்ட பொலிஸார், அவரை கைது செய்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஏம்.றியால், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .