Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 25 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
20ஆவது சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு பாதகமானதாகும். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இதை முழுமையாக எதிர்க்கின்றோம். ஆனால், அதில் திருத்தங்கள் கொண்டு வரும் பட்சத்தில் நாங்கள் அதை ஆதரிப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி கயா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
குறிப்பாக் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள தலைவர்களில் நானும் ஒருவன் என்ற வகையிலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் இது தொடர்பில் முன் வைத்துள்ள ஆலோசனையில் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.
அதில் புத்தளம் முஸ்லிம்களைக் கொண்ட தனித்தொகுதியாக்கப்படல் வேண்டும். அக்குறனை முஸ்லிம்களை கொண்ட தனித்தொகுதியாக்கப்பட வேண்டும். கம்பளை உடுநுவரவை இணைத்து முஸ்லிம்களை உள்ளடக்கி ஒரு தனித்தொகுதியாக்கப்படல் வேண்டும்.முஸ்லிம்களுக்கான தொகுதிகள் உள்வாங்கப்படல் வேண்டும்,
மேலும், முஸ்லிம்களுடைய வாக்களிப்பை பாதுகாக்கும் பொருட்டு இரண்டு வகையான வாக்களிப்பு முறை போன்ற விடயங்களை நாம் முன் வைத்துள்ளோம். இவ்வாறான விடயங்கள் உள் வாங்கப்படுமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்குவோம். இல்லா விட்டால்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்ப்போம். அதில் அமைச்சர்களான றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம்; உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்க வேண்டி ஏற்படும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனோடு இணைந்த சில கட்சிகள் இதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கின்றனர். அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் அதற்கு எதிர்ப்பென்றும் சொல்லவில்லை. ஆனால், அதிலிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்த்துக் கொண்டிருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு அதற்கு ஆதரவாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இந்த 20ஆவது சட்டத்திருத்தை நிறைவேற்ற முடியாது.
20ஆவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் விதத்தை பொறுத்துத்தான் முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என்று சொல்லமுடியும். தற்போது முன் வைக்கப்பட்டுள்ள 20ஆவது சட்டத்;திருத்த வடிவமானது முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானதாகும்.
தேர்தல் ஆணையாளர், அமைச்சரவை அங்கீகாரத்துடன் இதன் வடிவம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதை பெரும்பான்மையான கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேணாரட்ன கூறுகின்றார். இதன் படி இந்த வரைவானது முஸ்லிம்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது.
தற்போது முஸ்லிம்களுக்குள்ள 21 நடாhளுமன்ற உறுப்புரிமையானது, இந்த 20ஆவது சட்டத்திருத்த வரைபின் படி 6 அல்லது 7 ஆசனங்கள் தெரிவு செய்யப்படுவதே மிகவும் கடினமான விடயமாகும்.
20ஆவது சட்டத்திருத்தை நாடாளுமன்றத்தில் முன் வைக்காமல் நாடாளுமன்றத்தை கலைக்க கூடாது என்று பௌத்த குருமார்கள், ஜாதிக ஹெல உறுமைய போன்ற அமைப்புக்கள் மிக கடுமையான அழுத்தங்களை ஜனாதிபதிக்கு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் தாருங்கள் என்று கடந்த புதன்கிழமை ஜனாதிபதியிடத்தில் கேட்டுள்ளோம். ஏனென்றால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு 100 நாட்களுக்குத்தான் ஆதரவளித்தது.
அந்த 100 நாட்கள் இப்போது முடிவடைந்து விட்டது. கடந்த புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி, எழுத்து மூலமாக ஜனாதிபதியிடம் எங்களிடம் அரசாங்கத்தை தருமாறு கேட்டுள்ளோம்.
ஆகவே ஜனாதிபதி, இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை சில நாட்களில் கூட கலைக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு எனது அரசியல் அறிவுக்கு எட்டிய வரை மிக மிக குறைவாகும். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு இந்நாடாளுமன்றம் இழு பட்டுச் செல்லலாம் என்றுதான் எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில்; நான் , முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், ஏறாவூர் நகர சபை முன்னாள் தலைவரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என இதன் போது ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
43 minute ago
54 minute ago
3 hours ago