2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் பாவனையை தடுக்க வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி  பி.எஸ்.எம்.சாள்ஸின் ஆலோசனைக்கமைய  பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூதின் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.

இதன் அடிப்படையில் 'எமது பிரதேசத்தில் போதைப்பொருளை இல்லாமல் செய்வோம்' என்ற தொனிப்பொருளில் ஊர்வலமும் வீதி நாடகமும் நேற்று வியாழக்கிழமை  பிறைந்துரைச்சேனை 206 சி கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றன.

பிறைந்துரைச்சேனை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான ஊர்வலம் மீண்டும் மைதனத்தை வந்தடைந்ததுடன், போதைப்பொருள் பாவனையால் சீரழியும் குடும்பம் என்ற  விழிப்புணர்வூட்டும் வீதி நாடகமும் இடம்பெற்றது.

அபிவிருத்தி உத்தியோகஸ்;தர் எம்.ஐ.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .