2025 மே 17, சனிக்கிழமை

விழிப்புணர்வூட்டும் ஊர்வலம்

Sudharshini   / 2015 மே 31 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரசார ஊர்வலம் ஒன்று நேற்று சனிக்கழமை (30) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் எம். கபீர் தலைமையில் இந்த பிரசார ஊர்வலம் நடைபெற்றது.

இதன் போது வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் இடாப்பின் பதிவின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இதில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபா, அதிகாரிகள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .