2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மகாஜனக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப அறிவைப் வளர்க்கும் நோக்கோடு 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

இவ் ஆய்வுகூடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர். இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் ரி. தண்டாயுதபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .