2025 மே 16, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

– வடிவேல் சக்திவேல்    

உலக சுற்றாடல் தினம் மற்றும் தேசிய புகையிலை தடுப்பு வாரத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வெள்ளிக்கிழமை (05) களுவாஞ்சிகுடி நகரில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.சனத் நந்தலால் தலைமையில் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், பிரதேச சபை செயலாளர் திருமதி யா.வசந்தகுமார,; களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் உட்பட பலர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம், பொதுச் சந்தையூடாக பட்டிருப்புச் சந்திவரை சென்று பின்னர் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், புகைத்தலால் ஏற்படும் தீங்குகள் சம்பந்தமாகவும் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பதாதைகள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டன.

இதில் பிரதேச சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தன் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .