2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் அக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவினால், நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனின் இல்லத்திலேயே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் மற்றும் ஜனநாயக கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.எஸ்.சாபி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தந்த சரத் பொன்சேகாவுக்கு மட்டக்களப்பு கலாசார பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X