2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிரஜைகளை விழிப்பூட்டும் மார்ச் 12 பிரகடனம்

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மார்ச் 12 பிரகடனம் மூலம் சிறந்ததோர் அரசியலுக்காக' எனும் தொனிப்பொருளில் பிரஜைகளை விழிப்பூட்டும் வாகனம், நேற்று திங்கட்கிழமை (29) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.

தேர்தலுக்கான வேட்புமனு வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அளவுகோல்கள் தொடர்பில் 2015 மார்ச் மாதம் 12ஆம் திகதி கட்சி தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்டது.

நாட்டில் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் பெப்ரல் அமைப்பு இந்த விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது.

அந்தவகையில், பெப்ரல் இது தொடர்பில் நாட்டு பிரஜைகளை விழிப்பூட்டு வாகன அணிவகுப்புடன் கையெழுத்து பெறுவதுடன் விழிப்பூட்டும் பணியையும் மேற்கொண்டுவருகின்றது.

இலங்கையின் சகல பாகங்களுக்கும் செல்லும் இந்த வாகன அணியானது நேற்று காலை திருகோணமலையை சென்றடைந்தது.

இதன்போது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த பிரஜைகளை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை வழங்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .