2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்த முயற்சி: வயோதிபர் கைது

Thipaan   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயன்கேணி கிராமத்தில் 14 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 62 வயதான வயோதிபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சிறுமி விளையாடி விட்டு வீடு செல்லும் வழியில் சந்தேக நபரான இந்த வயோதிபர் அயலிலுள்ள பற்றைகளுக்குள் சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அவ்வேளையில் குறித்த சிறுமி கூக்குரலிட, அக்கம்பக்கத்தால் சென்றவர்கள் சிறுமி காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வயோதிபரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேக நபரான வயோதிபருக்கு எட்டுப் பிள்ளைகள் உள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .