2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு செயலமர்வு

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு உளவளத் துணை தொடர்பான செயலமர்வு, ஒந்தாச்சிமடம் உளவளத்துணை நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.
 
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி. பிறேமா கௌரீசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களும் அடங்கலாக 40 ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
 
இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளவளத்துணை வைத்திய அதிகாரி ரி.கடம்பநாதன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.புவிதரன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினர்.
 
பாடசாலை மட்டத்தில் காணப்படும் பிறள்வான பிள்ளைகளை இனங்கண்டு, அவர்களை சமூகத்தில் இணைத்தல் மற்றும் பிள்ளைகளை துஸ்பிரயோகங்களிலிருந்து தடுத்தல் ஆகிய பல விடயங்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டதாக மண்முனை தென் எருவில் பற்று சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.புவிதரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .