2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதிய பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா

Thipaan   / 2015 ஜூலை 02 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வாழைச்சேனைக்கான புதிய பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா நேற்று (01) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வு, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சமந்த வி அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஷீர் அஹமட் கலந்து கொண்டார்.

அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மாயில், கிழக்கு மகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எச்.எம்.மீராமுஹைதீன்,  கிழக்கு மாகாண வீதிப் பயனிகள் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .