2025 மே 16, வெள்ளிக்கிழமை

'கிழக்கு மாகாணசபையில் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

நல்லாட்சிக்கு முன்னுதாரணமாக கிழக்கு மாகாணசபையில் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கான இன நல்லுறவு இப்தார் நிகழ்வு, மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர்  கிழக்கு மாகாணசபையிலும் நாம் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த நல்லாட்சி தொடர்ந்தால், கிழக்கு மாகாணத்தில்  வேலையற்றுள்ள  சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் பிரச்சினையை தீர்த்துவைக்கும் ஆட்சியா இந்த  மாகாணசபையின் ஆட்சி இருக்கும்' என்றார்.

'எங்களுக்குள் இருக்கின்ற பிளவுகளை மறந்து கிழக்கு மாகணத்தை கட்டியெழுப்பவேண்டும். ஒற்றுமையையும் சகோரத்துவத்தையும் ஏற்படுத்த நாம் அனைவரும் பாடுபடவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எ.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .