2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தங்கச்சங்கிலி அபகரிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றுப் பகுதியிலுள்ள வீடொன்றில்  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வயோதிபப்  பெண்ணொருவர் உறங்கிக்கொண்டிருந்தபோது, அவரது சுமார் 125,000 ரூபாய் பெறுமதியமான இரண்டரை பவுண் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டிலிருந்த மூன்று பேர் உறங்கிக்கொண்டிருந்தனர். இந்த  வேளையில் மாடி வழியாக உள்நுழைந்த திருடன் தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X