Suganthini Ratnam / 2015 ஜூலை 22 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களும் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் பெரும்பான்மையினத்தவருடன் இணைந்து இன ஐக்கியத்துடன் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டுமென்பதுடன், இதன் மூலம் நாடு சுபீட்சமடைய வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வரவேண்டும். இதற்கான பயணத்திலேயே தாம் இணைந்துள்ளதாக கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன்; தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியா நகரசபை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் மிளிரவுள்ள ஆட்சியில் நேர்மையான தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் காணவுள்ளோம். மத, இன வாதங்களுக்கு இந்நாடு இனிமேலும்; அடிமைப்படக்கூடாது' என்றார்.
'வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தற்போது எமக்கு பாரிய சவால்களாக உள்ளன. கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாடு பொருளாதார நலம் மிக்க நாடாக மாறவேண்டியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியதும் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய கைத்தொழில் பேட்டையை இப்பிரதேசத்தில் அமைப்போம் என்பதை உங்களிடம் நான் உறுதியளிக்கின்றேன்.
மேலும், இந்தப் பிரதேசத்தில் அச்சமின்றி நீங்கள் வாழவேண்டும். எனவே, நீங்கள் அளிக்கும் வாக்குகள் மூலம் இந்த மாவட்டத்தில் ஆற்றலுள்ள, அச்சமின்றி தட்டிக் கேட்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவுசெய்யப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .